திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சி அத்வாலே சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் மோகன்லால் மற்றும் உறுப்பினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறவர் சமுதாயத்தினர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குறவன் எஸ்சி ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன் காரணமாக முறையான ஆய்வு செய்யப்படாமல் எஸ்சி ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர்.
எனவே குறவன் இன மக்களுக்கு எஸ்சி ஜாதி சான்றிதழ் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் இதற்கு முன்பு கொடுத்த ஜாதி சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment