கீழுர் கிராமத்தில் 11கோடியே 20லட்சம் மதிப்பில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி திறந்து வைக்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 May 2023

கீழுர் கிராமத்தில் 11கோடியே 20லட்சம் மதிப்பில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி திறந்து வைக்கப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை கீழூர் கிராமத்தில் 11 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திறந்து வைத்தார்.

இந்தப் பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பறை உணவு தயாரிக்கும் அறை உணவு உண்ணும் அறை நீர் வசதி கொண்ட அறை அறிவியல் ஆய்வுக்கூடம் கழிவறை கூடம், 50 மாணவியர்கள் தங்கும் விடுதி கட்டிடம், பள்ளி தலைமை ஆசிரியருக்கு குடியிருப்பு கட்டிடம் மற்றும் 100 மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. மேலும் தரைத்தளம் 348.88 சதுர மீட்டர் மற்றும் கட்டட பரப்பளவு 769.76 சதுர மீட்டராக அமைந்துள்ளது. 


இந்த திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அரசு அதிகாரிகள் தாட்கோ செயற்பொறியாளர்கள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/