இந்த நிலையில் நேற்று தகர குப்பம் பகுதியில் இருந்து ஆத்தூர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டன, இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் யானையை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று ஜோலார்பேட்டை அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள நிலத்தின் வழியாக இரண்டு யானைகள் சென்றதால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அப்போது யானைகள் இரண்டும் சின்னகவுண்டர் வாலைத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சின்னகம்பியம்பட்டு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் லோகேஷ் (28) செல்பி மோகத்தால் செல்பி எடுக்க முயன்ற திடீரென யானை திரும்பி தும்பி கையால் தாக்கியதில் மார்பு காயம்பட்டார், உடனே காவல்துறையினர் மீது திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லோகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
முடிந்த அளவு பொதுமக்கள் யனையை தொந்தரவு செய்யக்கூடாது இன்று மாவட்ட நிர்வாகம் கூறி இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் யானையை கண்டவுடன் பின்னாடி ஓடுவது செல்பி எடுப்பது கல்லெறிவது உள்ளிட்ட சம்பவங்களை செய்து வருகின்றன இதன் காரணமாக யானையை விரட்டுவதில் சிரமம் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment