திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 100000 இரண்டாவது பரிசாக 80000 மூன்றாவது பரிசு 60000 உட்பட மொத்தம் 115 பரிசுகளுடன் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. திருவிழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.


இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை வட்டாட்சியர் சிவ பிரகாசம், கோட்டாட்சியர் லட்சுமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தனர் மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஆகியோர் பங்கேற்றனர். திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment