ஆம்பூர் அருகே காரின் டயர் வெடித்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து. கார் சாலை நடுவில் தலைக்குப்புற கவிழ்ந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினர் சென்னை பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஹரிராஜேஷ் என்பவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து காரில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வந்தபோது காரின் டயர் வெடித்து தேசிய நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


விபத்தில் காரில் பயணம் செய்த ஐ. டி ஊழியர் ஹரிராஜேஷ் மற்றும் அவரது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்

No comments:
Post a Comment