திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2023

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று 72 லட்சத்து 87 ஆயிரத்து 108 ரூபாய் மதிப்பில் 6 வாகனங்களை ஒன்றிய குழு தலைவருக்கு வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி ,ஒன்றிய குழு தலைவர்கள் துணைத் தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/