கல்குவாரி நீரில் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர் கோபிநாத் சடலமாக மீட்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 May 2023

கல்குவாரி நீரில் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர் கோபிநாத் சடலமாக மீட்பு.

நாட்றம்பள்ளி தாலுக்கா சுண்ணாம்புக்குட்டை பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி நீரில் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவர் கோபிநாத் சடலமாக மீட்பு தீயணைப்பத்துறை வீரர்கள்  20 மணி நேரம் போராடி  மாணவனின்  உடலை மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் பையனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் மகாலிங்கம் வனிதா தம்பதியரின் ஒரே மகனான கோபிநாத்(21) இவர் கோயம்புத்தூர் விவசாய கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி வேளாண் படிப்பு படித்து வந்தார். 


வழக்கம்போல விடுமுறையில் வந்த கோபிநாத் தன் நான்கு நண்பர்களுடன் சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாமல் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நீச்சல் பழக வந்துள்ளார். நண்பர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது கோபிநாத் மேலிருந்து குதித்துள்ளார். குதித்தவர் மேலே வரவில்லை மாயமானார்.  


அதைத் தொடர்ந்து நண்பர்கள் சிறிது நேரம் தேடிப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளனர் இருந்த போதிலும் மாயமான மாணவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்து வீரர்கள் கடந்த 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு  மாணவனை சடலமாக மீட்டனர்.  


மீட்கப்பட்ட கல்லூரி மாணவனின் உடலை நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்ற போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/