திருப்பத்தூர் நகராட்சி அலுவலக முன்பு 137 வது மே தினத்தை முன்னிட்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 May 2023

திருப்பத்தூர் நகராட்சி அலுவலக முன்பு 137 வது மே தினத்தை முன்னிட்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு 137 வது மே தினத்தை முன்னிட்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தின அதில் முக்கிய கோரிக்கைகளாக அனைத்து துப்புரவு  பணியாளர்களுக்கும் மருத்துவதுவ அட்டை வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு சொசைட்டியில் கடன் வழங்க ஆணையர் கையெழுத்திட்டு கடனை பெற்றுத் தர வேண்டும்.

காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு கூலியை அதிகரித்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தினர், மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் செயலாளர் ரவி,  பொருளாளர் கோபி, மற்றும் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/