இதில் சிறப்பு அழைப்பாளயாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார், ஒன்றிய குழு தலைவர் வெண்ணிலா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த சிறப்பு மனுநீதி முகாமில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி விதவை உதவி தொகை திட்டம், தனிப்பட்டா, செவி திறன் கருவி, சத்துணவு பெட்டகம், வாரிசு சான்று பட்டா மாற்றம், உட்பிரிவு நத்தம் பட்டா, புதிய குடும்ப அட்டை, விதவை சான்று, ஓ பி சி சான்று சிறு குரு விவசாய சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டது. பல்வேறு திட்டத்தின் கீழ் சுமார் 13,06,525 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர், இதைத்தொடர்ந்து அரசு பள்ளியில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர் பாண்டியன் நட்டார். அதேபோல நூலக கட்டிடத்தையும் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment