திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன்நகர் கிராமத்தில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார்.


இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர திமுக செயலாளர் ம.அன்பழகன், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவபிரகாசம், ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, ஒன்றிய திமுக துணை செயலாளர் துளசி மணிவண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment