திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1993-1995 ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் 60 பேர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். தாங்கள் பயின்ற ஆசிரியர்களை அழைத்து அவர்களையும் கவுரவித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினர்.


ஆசியர்கள் அனைவரும் குழந்தைகளையும் பக்குவமாக பாசத்துடன் வளர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள். தாங்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்றும் எத்தனை பிள்ளைகள், என்ன படிக்கிறார்கள், என்ன பணியில் உள்ளனர் என அனைவரும் பகிர்ந்துக்கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பிரபாகரன், குமார், ஆரிப், செந்தில், வேடியப்பன், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment