திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்வு முகாம்- திரளாக பொதுமக்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 May 2023

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்வு முகாம்- திரளாக பொதுமக்கள் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் சார்பில் வாரம்தோறும் குறைத்தீர்வு முகாம் நடைபெற்று. அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகம் நடைபெற்றது.  பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்., BVSc, தலைமையில் மக்கள்  குறை தீர்வு கூட்டம் இன்று  திருப்பத்தூர் ரயில் நிலையம் ரோட்டில் உள்ள  தனியார்  திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.  

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது, மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில் பொதுமக்களின் புகார் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/