இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் பொதுமக்களின் நலன் கருதி திருப்பத்தூர் மாவட்டத்தில் மே 2021க்கு பிறகு இதுவரை 49 புதிய நியாய விலை கடைகளை திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்வதில் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதிலும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது மே 2023 மாதம் முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் செரி ஊட்டப்பட்ட அரிசி நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பேசினார்.
இந்த செரிவூட்டப்பட்ட அரிசி ஆனது பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதை தடுக்கும் என்றும் பேசினார்.
முக்கியமாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வைக்கிறது, இந்த செரிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவிற்கு ஒரு கிலோ என்ற விதிக்கத்தில் சேர்க்கப்படுகிறது, இந்நிகழ்ச்சியில் கிராம பூசாரி ஒருவர் திடீரென சாமி ஆடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment