மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புத்தகம் அதிக அளவில் வாங்கும் நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இதனால் இரண்டாவது இலக்கியத் திருவிழாவில் சுமார் ரூபாய் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றது, இதைத்தொடர்ந்து இரண்டாவது இலக்கிய திருவிழாவில் அதிகளவில் புத்தகம் வாங்கிய வாசகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆயிரம் முதல் 25 ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங்கிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போன்று ஆட்சியர் அலுவலக இரண்டாவது வளாகத்தில் புதிய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நூலகத்திற்கு சின்னகம்மியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி உமாராணி ஞானமோகன் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment