பி பி ஜி சங்கர் படுகொலை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2023

பி பி ஜி சங்கர் படுகொலை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இன்று பாரதிய ஜனதா கட்சி பட்டியல அணி சார்பில் மாநில பொருளாளர் பி பி ஜி சங்கர் படுகொலையை கண்டித்தும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பு தவறிய திமுக அரசை கண்டித்தும்  LIC அலுவலகம் எதிரில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சி மாநில பொருளாளர் பி பி ஜி சங்கர் அவர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கும் படியும் இனி இது போல் தமிழ்நாட்டில் நடக்க கூடாது எனவும் கடுமையான தண்டனைகள் இருக்க வேண்டும் என மாவட்ட பட்டியல் அணி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.

திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி வாசுதேவன் கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மாவட்டத்தில் பொதுச் செயலாளர் தண்டாயுதபாணி மாவட்ட செயலாளர் கலை சோமசுந்தர பாரதி சுகிசிவம் சுரேஷ் டிவி முருகன் மற்றும் கட்சியின் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக் 

No comments:

Post a Comment

Post Top Ad

*/