இந்த ஆர்ப்பாட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி 1.1 கோடி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளது. இரும்பு, போலிக்அமிலம், வைட்டமின் பி 12 வேதிப்பொருட்கள் அடங்கிய கலவை மாவை அரிசி வடிவில் எந்திரங்கள் மூலம் வார்த்து எடுக்கப்பட்டு நேரு 100 கிலோவுக்கு ஒரு கிலோ விதம் கலக்கப்படுகிறது. அறிவியல் பூர்வமாக எந்த வித ஆய்வுகளும் செய்யாமல் விநியோகம் செய்து பொதுமக்கள் உயிரை சோதனைக்களம் ஆக்குகிறார்கள். ஒன்றிய அரசு மக்களிடம் தினித்துள்ள செறிவூட்டிய அரிசி திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

இதற்கு பதிலாக 2023 ஆம் ஆண்டு சிறு தானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்துள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும். மண்ணில் விளையும் விலைப் பொருளே வாழ்வை காக்கும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1978,1997,2001,2013 ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது 100 ஹெக்டருக்கு (250 ஏக்கருக்கு) மேலாக நில ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதும் இதில் உள்ள நீர்நிலைகள் நீர் வாரத்து கால்வாய்கள் குளம், குட்டைகள் நிலத்தடி நீர் வளம் பாசன உரிமை சுற்றுச்சூழல், மேச்சல் நிலம், சுடுகாடு இடுகாடு ஆகியவையும் பாதிக்கும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டை அழித்து கழனி ஆக்கிட இயலுமா ஆகவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சுந்தரேசன் சாமிகண்ணு, நந்தி ஜாபர் சாதிக் , மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment