புதுப்பட்டி பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

புதுப்பட்டி பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் சுந்தரம்பள்ளி நியாய விலைக் கடையில் இருந்து பிரித்து புதுப்பட்டி பகுதிக்கு புதிய பகுதி நேர நியாய விலை கடையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி பாஸ்கர பாண்டியன் இஆப  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திரு எஸ் பி முருகேசன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் தர்மேந்திரன், சதாசிவம், வட்ட வழங்கல் அலுவலர் ஜி பி திருமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே முருகேசன் மற்றும் கே எஸ் ஏ மோகன்ராஜ், சங்கிலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், துணை தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தன், சாந்தா சண்முகம், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் கே விஜயலட்சுமி கருணாநிதி மற்றும் துணைத் தலைவர் தீபா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி கார்த்தி மற்றும் தோழர்கள் பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/