திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுடன் கலைஞரின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடிய நகர மன்ற தலைவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுடன் கலைஞரின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடிய நகர மன்ற தலைவர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுடன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி  பிறந்தநாள் விழா  நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக  ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா . டி ரகுநாத். நகர மன்ற உறுப்பினர்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மேலும் திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/