புதூர்நாடு மலைப்பகுதியில் மானை வேட்டையாடிய நபர் கைது- மான் கறி பறிமுதல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

புதூர்நாடு மலைப்பகுதியில் மானை வேட்டையாடிய நபர் கைது- மான் கறி பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ்கிடிஜாலா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்   அடிப்படையில் வன பாதுகாவலர் பிரபு ஆகியோர் ஆண்டியப்பனூர் காப்புக்காடு சேர்க்கானூர் பீட்டில் வனவர் மற்றும் வன காவலர்கள் ஆகியோர் அவ்வழியாக வந்தவர்களை  சோதனையில்  செய்தனர் அப்போது சின்னவட்டனூர்  பகுதியைச் சேர்ந்த காளி மகன் ரகு(39) ஒரு பையில் மான் கறியை வைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.  அவருடன் வந்த கல்லாவூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் தப்பி ஓடினார். 


ரகு விடம் இருந்து 10 கிலோ மான் கறியை பறிமுதல் செய்து அடக்கம் செய்தனர். அவரிடம் மானை வேட்டையாட பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மானை கொன்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், தப்பி ஓடிய மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/