சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு தலைமை பொது மருத்துவமனை 5 வது மாடியில் மாவட்ட அளவிலான எங்கேயும் எப்போதும் பெண்களுக்கான 24x7 சேவை மையம் மற்றும் சகி-ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம், ஜூன் 21ல் உலக யோகா தினம் ஆகியவற்றை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திருமிகு தெ பாஸ்கரபாண்டியன் இ ஆ ப அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A. நல்லதம்பி, அரசு தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார், சமூக நலன் அலுவலர் சில்வியா வினோதினி, மேலும் திமுகவின் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, பொதுக்குழு உறுப்பினர் ரகுநாத், மாவட்ட பிரதிநிதி சரவணன், ஒன்றிய கவுன்சிலர் டி.கே.ஹனுமன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment