திரியாலம் தனியார் கல்லூரியில் ஜுன் 26 சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 June 2023

திரியாலம் தனியார் கல்லூரியில் ஜுன் 26 சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கி வைத்தார்.

நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் தனியார் கல்லூரியில் ஜுன் 26 சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கி வைத்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா, திரியாலம் தனியார் கல்லூரியில் சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவிகள்  கலந்துக்கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.  


இதில் மதுவை ஒழிப்போம், மானுடம் காப்போம், நெகிழியை ஒழிப்போம், என கோசங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இதில் கல்லூரி தாளாளர் சண்முகம், முதல்வர் முனைவர். குமணன் மற்றும் வட்டாட்சியர் குமார், பேராசிரியர்கள், கலந்துக்கொன்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:

Post a Comment

Post Top Ad

*/