திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கும் விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கும் விழா.


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வாணியம்பாடி வளையாம்பட்டு  பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. முதல்வர் அவர்களின் தொலை நோக்கு பார்வை 2023-ன் படி மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திட்டப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இக் குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்புற ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆதரவற்றோருக்கு மற்றும் வீடு இல்லாதவருக்கு அதிகாரிகள் விசாரித்து வீடுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்



அடுக்குமாடி குடியிருப்பின் சிறப்பம்சங்கள், வீட்டின் மொத்த பரப்பளவு 400 சதுர அடி மாணவ மாணவிகளுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் பள்ளி மற்றும் கல்லூரி வசதி உள்ளது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது அனைத்து வசதிகளும் மிக அருகில் உள்ளது. 


  1. இந்த வீீடுகள் தேவைப்படுவோர் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவில் ஒதுக்கீடு கோரும் நபரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். 
  2. மனுதாரர் மற்றும் குடும்பத்தினர் பெயரில் வேறு எங்கும் வீடோ நிலமோ இருத்தல் கூடாது. 
  3. கணவர் மற்றும் மனைவி ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  


விண்ணப்ப படிவங்களுடன் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.  இதற்காக தனி பிரிவு ஏற்படுத்தப்பட்ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/