மறுவாழ்வு இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

மறுவாழ்வு இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


திருப்பத்தூர் இரயில் நிலையம் சாலையில் அமைந்துள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

திருப்பத்தூர் இரயில் நிலையம் சாலையில் அமைந்துள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் 79 ஆண்கள், 49 பெண்கள் என மொத்தம் 128 நபர்கள்பராமரிக்கப்பட்டு வருகினறனர்


இந்த ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவு மற்றும் சிகிச்சை அளிப்பவர்களின் விவரங்கள் ஆகியவை கேட்டறியப்பட்டது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் எந்த ஊரு, இங்கு நன்றாக கவனித்துகொள்வது குறித்து மாவட்ட ஆட்சிததலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள். 


அதனை தொடர்ந்து திருப்பத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் வாகை, நாவல், பூவரசன், பாதாம், மாதுளை, அவிஞ்சி, விளாம் உள்ளிட்ட பல்வேறு வகையான 30 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த மரக்கன்றுகளை நன்றாக பராமரித்து சரியான நேரத்தில் நடவு செய்ய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்கள். 


பின்னர் திருப்பத்தூர் இரயில் நிலையம் சாலையில் அமைந்துள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் நொச்சி காட்டு நெல்லஇழுப்பை, பூவரசு, மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான 150 மூலிகை மரங்கள் பராமரிக்கப்பட்டுவரும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 


இந்த ஆய்வுகளின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (கூ.பொ) முருகேசன் மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் மரு.பிரபாவராணிமுடநிக்கு வல்லுநர் இனியன், உதவும் உள்ளங்கள் தலைவர் இரமேஷ், உதவும் உள்ளங்கள் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/