வாணியம்பாடியில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 July 2023

வாணியம்பாடியில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறப்பு.


வாணியம்பாடியில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து இனிப்பு வழங்கினர்.

தமிழக முழுவதும் உள்ள 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூபாய் 1559.25 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொளி வாயிலாக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள்,  பொதுமக்கள்என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/