திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராளா கடந்த 15ஆம் தேதி ஆய்வுசெய்தார், தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து பேரூராட்சிகளின் இயக்குனர் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தார். பல்வேறு ஆலோசனைகளை செயல் அலுவலருக்கு வழங்கியதாகவும் முறைகேடுகள் இல்லாமல் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வருகிறது.
நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment