

இதற்கிடையில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த மீனாட்சி நிலையம் பேருந்து நிலையம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படுகிறது மீனாட்சி நிலைய பேருந்து நிறுத்தம் சுற்றி பல அரசு அலுவலகங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன, மேலும் கிட்டதட்ட 1.5 கிலோமீட்டர் ஒருபுறம் பேருந்து நிலையத்திற்கு அல்லது புதுப்பேட்டை ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டியுள்ளது இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் நலன் கருதி மீனாட்சி நிலையம் பேருந்து நிலையத்தை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மனு அளிப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்வில் தலைமை தொகுதி தலைவர் ராஜா தேசிங்கு, மாநில சுற்றுச்சூழல் பாசறை பொருளாளர் பிரதீப் குமார், மற்றும் ஆரிப், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் மாரபாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment