திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்னை தொண்டு நிறுவனம் (நிக்கல் பவுண்டேசன் ) - வாழ்க்கை திறன் பயிற்சி கொடுத்தனர். இந்த பயிற்சியில் மாணவ, மாணவிகளுக்கு சுய ஆய்வு, இலக்கு நிர்ணயித்தல், தொடர்பாற்றல், நினைவாற்றல் ஆகிய பயிற்சிகளை ராமசாமி தலைமையிலான 16 பேர் கொண்ட குழு பயிற்சி அளித்தனர்.


இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, பட்டு ராஜா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நினைவாற்றல் மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளி கொண்டு வரவும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment