திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டேரி மலைப்பகுதியில் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்திற்குட்பட்ட பனங்காட்டேரி பகுதிக்கு செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானையின் அருகில் சென்று தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வயது முதிர்ந்த காட்டு யானையால் இதுவரையில் எவ்வித உயிர்சேதமும் ஏற்பட்டவில்லை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த காட்டுயானையை மீண்டும் கிராம பகுதிக்கு வராமல் இருக்கா வனத்துறையினர் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment