திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் சுன்னாம்புகார் தெருவில் N.அப்துல் பாரி என்பவர் N.A.B Traders என்ற பெயரில் அரிசி கடை நடத்தி வருகிறார். 03−07−2023 அன்று காலை 8மணியளவில் அரிசி கடை உரிமையாளர் அப்துல் பாரி அவர்களுக்கு 93422 59529 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து போன் வந்தது.
அதில் பேசிய நபர் கூறியதாவது. நான் ஆம்பூரில் இருந்து பேசுகிறேன் NAB Traders அரிசி கடை அப்துல் பாரி பாய் அவர்களா என்று கேட்டார்..?? ஆமாம் நான் பாரிபாய் தான் என்று கூற அதற்கு அவர் கோயிலுக்கு அன்னதானம் செய்ய 10மூட்டை Bullet அரிசி வேண்டும் என்று கேட்டார் மற்றும் அரிசி மூட்டைகளை ரெடிதோப்பு அரசமரம் கோயிலுக்கு எடுத்து வாருங்கள் நான் அங்குதான் இருக்கிறேன். அரிசி மூட்டைகளை எடுத்து வந்து இங்கு கோயிலில் வைத்தவுடன் பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார்.
இதனால் அரிசி மூட்டைகளை எடுத்துகொண்டு அவர் சொன்ன ரெடிதோப்பு அரசமரம் கோயிலுக்கு சென்று அரிசி மூட்டைகளை வைத்து அவருக்கு போன் செய்து பேசினேன். அதற்கு அவர் நான் நாகேஸ்வரம் கோயிலுக்கு வந்துவிட்டேன். இங்கு வந்து பணத்தை வாங்கிகொள்ளுங்கள் என்று கூறியதால் உடனே அங்கு சென்று போன் செய்தால் பைபாஸ் சாலையில் AXIS வங்கி எதிரே வாருங்கள். நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.
மீண்டும் அவர் சொன்ன வங்கியிடம் சென்று போன் செய்தால் அந்த நபர் போன் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டான் சந்தேகமடைந்த அரிசி கடை உரிமையாளர் உடனடியாக அவர் அரிசி மூட்டைகளை வைத்த கோயிலுக்கு சென்று பார்த்தால் 10 அரிசி மூட்டைகளில் 6 அரிசி மூட்டைகள் ஆட்டோவில் எடுத்து சென்றுவிட்டதாக தெரியவந்தது மீதியுள்ள 4 அரிசி மூட்டைகள் மட்டும் மீட்டு எடுத்து வந்துவிட்டார்.
இந்நிலையில் அரிசி வியாபாரியை திசைதிருப்பி அரிசி மூட்டைகளை கொள்ளையடித்து சென்ற நபர் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளான் இது குறித்து அரிசி கடை உரிமையாளர் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.
No comments:
Post a Comment