திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 208 பண்ணை குட்டை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ. வேலு கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று எலவம்பட்டியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பண்ணை குட்டையை கடப்பாரையால் தோண்டி துவக்கி வைத்தார்.


இந்த பண்ணைக் குட்டையானது சுமார் 1.5 மீட்டர் ஆழமும் 22 மீட்டர் நீளமும் 11 மீட்டர் அகலமும் கொண்ட பண்ணை குட்டையை மகாத்மா காந்தி உறுதி வேலை திட்ட பணியாளர்களை வைத்து வேலை நடைபெறுகிறது. இந்தப் பண்ணை குட்டை அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், விவசாயம் செழிக்கவும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குனர். ஊராட்சிகள் விஜயகுமாரி, ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், ஊராட்சி செயலாளர். ராஜேஷ் குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment