நாட்றம்பள்ளி அருகே பண்ணை குட்டை அமைக்கும் பணியாளர்களுடன் சேர்ந்து மண் அள்ளிய மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 July 2023

நாட்றம்பள்ளி அருகே பண்ணை குட்டை அமைக்கும் பணியாளர்களுடன் சேர்ந்து மண் அள்ளிய மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும்  ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1400 பண்ணைகுட்டை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பூமி பூஜை போட்டு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான மல்லகுண்டா, கத்தேரி, நேதாஜி நகர் ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பண்ணை குட்டைகளை இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது நேதாஜி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும் பண்ணை குட்டையில் இருந்து மண்ணை அள்ளினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டுதல்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/