திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, மல்லகுண்டா ஊராட்சி கோயன்கொல்லை பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சென்றார். அப்போது அதே பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்த செவிலியரிடம் கர்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை சரியாக நடைபெறுகிறதா? கருவில் இருக்கும் குழந்தைகளை ஆணா பெண்ணா பரிசோதனை செய்கிறீர்களா என கர்பிணி தாய்மார்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் அரசு மருத்துவமனையில் மட்டுமே பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.
அதை தொடர்ந்து செவிலியரிடம் பெண்கள் கர்பம் தரித்த பிறகு மாற்று ஊர்களுக்கு சென்று விடுகிறார்களா என்றார். ஒருசிலர் அப்படி செல்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். இந்த நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment