அப்போது மாவட்ட ஆட்சியரும் பள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குறைவான சாப்பாடு இருந்ததால் குழந்தைகள் பற்றாக்குறையுடன் எழுந்து சென்றனர். அதனால் சமையல் செய்யும் பெண்களிடம் மாணவ, மாணவிகள் வயிறு நிறைய சாப்பிடவேண்டும். இல்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்தார்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியையும் ஆய்வு செய்தார். அருகில் இருந்த 8-ம் வகுப்பிற்கு சென்ற ஆட்சியர் மாணவிகளிடம் பாடங்களை படிக்க சொல்லி அவர்களின் வாசிப்புத்திறனை கண்டறிந்தார். இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து படியுங்கள் படிப்பு மட்டுமே ஒருவரை உயர்த்தும் என்றும் அறிவுரை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையராஜா மற்றும் துணைத் தலைவர் வடிவேல் அரசு அதிகாரிகள் பல நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment