திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு ஊராட்சி மேல் நீர் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்கள், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மாவட்ட த்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 September 2023

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு ஊராட்சி மேல் நீர் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்கள், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மாவட்ட த்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த தமிழ்நாடு ஊராட்சி மேல் நீர் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்கள்,  தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் படி ஜி.ஓ 33 இன் படி அரசு அறிவித்த ஊதிய உயர்வினை மாவட்ட முழுவதும் அமல்படுத்த கோரியும்,  தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரியும், அரசு அறிவித்த ஊதிய உயர்வு வழங்காமல் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க கோருதல் ஊராட்சி பொது நிதியில் ஊதியம் பெறும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு 198 படி காப்பீடு மாதந்தோறும் செலுத்தப்பட வேண்டும்.


ஓ எச்டி ஆப்ரேட்டர்களுக்கு  அரசாணை  நிலை எண். 15, 254, 71, 76,   உடனடியாக அமல்படுத்த வேண்டும், குடிநீர் தொட்டியை மாதம் இருமுறை சுத்தம் செய்ய ஊதியம் ரூபாய் 500 ஐ ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் , தூய்மை பணியாளர்களுக்கு அரசாணை எண் 385,  129, 14, 03 ன்படி உயர்த்தப்பட்ட ஊதியமும், நிலுவைதொகையை உடனடியாக வழங்கப்பட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு பணி பதிவேடு துவங்கவும், பிரதி மாதம் 5-ம்  தேதிக்குள் ஊராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைலர். வீராசாமி கலந்து கொண்டார். ஆறு ஊராட்சி  ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/