திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படி கருத்தியியல் பயிலரங்கம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஏலகிரிமலையில் வரும் 27,28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
முதல் கூட்டமான இதில் திராவிட இயக்க சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள், இதுவரை திமுக சந்தித்துள்ள போராட்டங்கள், இப்போராட்டத்தின் மூலமாக பெற்றுள்ள வெற்றிகள், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து திராவிட சிந்தனையாளர்களை கொண்டு பயிற்சி நடத்தப்படும். இதில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொள்வார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவரணி துணை செயலாளர்கள் ஜெரால்ட், தமிழரசன் மற்றும் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், துணை அமைப்பாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment