இந்த பள்ளிக்கு கழிவறை வசதி இல்லாமல் இருந்ததை அறிந்த வங்கி மென்பொருள் நிறுவனமான டெமினோஸ் என்ற அமைப்பானது கட்டி கொடுக்க முன் வந்தது. இந்த கழிவறை 23 லட்சம் மதீப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த விழாவிற்கு டெமினோஸ் மண்டல தலைவர் கணேசன் ஸ்ரீராமன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கழிப்பறையானது மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்படதக்கது, அது மட்டுமின்றி நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளுடன் எட்டு கழிப்பறைகள் வடிவைமக்கப்பட்டுள்ளன.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், இனப்பெருக்க உறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க நேரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு டெமினாஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் திருப்பத்தூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு புதிய கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளி பயன் படும் வகையில் வடிவமைக்கப்பட்டு அமைத்து கொடுத்துள்ளனர்.
இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு மிகவும் உதவும் வகையில் உள்ளது.
- மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment