திருப்பத்தூர் மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் வாக்களிப்பதின் அவசியம் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் திரளாக பங்கேற்றனர். துவங்கி வைத்து பேசிய ஆட்சியர் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது அனைவரின் கடமை என்றும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் பானு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், தேர்தல் துணை வட்டாட்சியர் விமல் கணேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment