திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி புத்துக் கோவிலில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் விநாயகர் வழிபாடு புண்ணியயாகம், தீபாரதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, நாதஸ்வர இன்னிசை திருப்பள்ளியெழுச்சி தாய் வீட்டு சீரி வரிசை எடுத்து வருதல், இடர்களை நீக்கி இன்பம் அருளிய தெய்வங்களுக்கு இரண்டாம் காலையாக வேள்வி பூஜைகள் ஆரம்பம், மூலமந்திர ஹோமம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் கோபுர காலசத்தின் மீது தீப ஆராதனை செய்யப்பட்டு மலர் தூவி புனித நீர் ஊற்றி பின்பு பக்தர்கள் மீது தெளித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் ஓம்சக்தி பராசக்தி என்று கோசம் எழுப்பினர், இதில் சுற்றுவட்டார பக்தர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் கோபிநாத்.

No comments:
Post a Comment