இந்த இனிய நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்டக்குழு உறுப்பினர் திரு கே ஏ குணசேகரன் அவர்கள் மற்றும் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் திரு எம் சண்முகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே முருகேசன் மாவட்ட திட்டக் குழு இயக்குனர் திரு செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி விஜயகுமாரி, ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் தாமோதரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவிகா முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஒன்றிய பொறியாளர் செல்வி, மற்றும் ஒன்றிய துணை செயலாளர் தீபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி கார்த்திகேயன், நித்தியானந்தம், மற்றும் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சமுத்து, முரளிதரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment