ஒரு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் பூ! பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 November 2023

ஒரு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் பூ! பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்!.


பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். 

இந்த பிரம்ம கமலம் பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும் அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் எனவும் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பிரம்ம கமலம் பூ ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும்.


இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த நீலா என்பவர்  பெங்களூர் சென்று இருந்த நிலையில் அங்கிருந்து பிரம்ம கமலம் பூ செடியை வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக நிலா குடும்பத்தினர் பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/