திருப்பத்தூர் மாவட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நிரல் திருவிழா என்னும் பிரச்சனை அறிக்கை பதிவு செய்வதற்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நிரல் திருவிழா என்னும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் அவர்கள் தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை அறிக்கைகளாக பதிவு செய்வதற்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அதற்கான தீர்வு காணும் பொருட்டு பொறியியல் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பில் திட்டத்தின் மூலம் தீர்வு காண இந்த அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படுவதுடன் பொறியியல் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாடும் சிந்தனை திறனும் மேம்படும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி பட்டறை ஆனது நடைபெற்றது என்ன மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment