நாட்றம்பள்ளி அருகே சாலையை ஆக்கிரமிப்பு செய்தும் பஞ்சாயத்து பைப் லைனை உடைத்து தக்காளி செடிக்கு தண்ணீர் விடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனி குடும்பத்தினரை கண்டித்து சாலை மறியல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 November 2023

நாட்றம்பள்ளி அருகே சாலையை ஆக்கிரமிப்பு செய்தும் பஞ்சாயத்து பைப் லைனை உடைத்து தக்காளி செடிக்கு தண்ணீர் விடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனி குடும்பத்தினரை கண்டித்து சாலை மறியல்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊசிக்கல் மேடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி குடும்பத்தினர் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும் மேலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் செல்லும் பஞ்சாயத்து பைப் லைனை உடைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அந்த தண்ணீரை தக்காளி செடிக்கு விடுவதாகவும் ஆதகம் தெரிவித்தும் அந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய நாட்டறம்பள்ளி  வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலை அக்ராகரம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் வட்டாட்சியர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுயதின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


- செய்தியாளர் கோபிநாத் 

No comments:

Post a Comment

Post Top Ad

*/