அதன் தொடர்ச்சியாக இன்று ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தகுதிஉள்ள மகளிருக்கு உரிமை தொகை திட்டம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் சுமார் 1600 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் இந்த துவங்கும் முன்பே அனைத்து ஆட்சியர்களுடன் ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு சிரமம் இன்றி வீட்டிற்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பட்டால் அரசு இ சேவை மையம் மூலம் மறுபடியும் விண்ணப்பிக்கலாம். இன்று இரண்டாவது கட்டமாக இன்று பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது.
= மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment