திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் ராஜ்குமார் வயது 26 இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சாய் சினேகா (21) இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்ததால் பெண் வீட்டார் இந்த காதல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காதல் ஜோடி கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்கு சென்று திருமணம் செய்துள்ளனர்.
சாய்சினேகா வீட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக பெண் வீட்டார் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர், இந்த நிலையில் இன்று பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் விசாரணை மேற்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர் குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment