நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடவைவை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 25 November 2023

நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடவைவை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, ஆத்தூர் குப்பம் ஊராட்சி பனந்தோப்பு பகுதியில்  உள்ள ஆற்றின் இரு பக்கமும், ஒரு இலட்சம் பனை விதை நடவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். ஆறுகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை தேக்கி வைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு கட்டமாக இன்று மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களை வைத்து பனை விதை நடவை ஆட்சியர் துவங்கி வைத்தார். இன்று முதல் சுமார் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார். 


இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் செல்வராசு, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார்,  அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில்  குறுங்காடுகள் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/