மேலும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமாவளவன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கையெழுத்திட்டனர்.
குழந்தைகளுக்கான நடை பயணம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை சென்று முடிவுற்றது. குழந்தைகளுக்கான நடை பயணம் விழிப்புணர்வு பேரணி குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை மற்றும் வன்முறைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment