கந்திலி அடுத்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் முன்னாள் பாரத பிரதமர் நேருவின் உருவத்தை முகமூடியாக அணிந்து கொண்ட குழந்தைகள் தின விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இதில் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா தலைமை ஆசிரியர் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் எழுதுகோல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நல்ல ஆசிரியர் சுந்தரம் அவர்கள் மாணவர்களுக்கும் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இவ்விழாவில மேலாண்மை குழு தலைவர் சுபா உதவி ஆசிரியர் சரளா சத்துணவு ஊழியர்கள் முபினா மற்றும் அருள்மொழி இனிப்பு வழங்கினர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment