இந்த முகாமில் கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் குமார் ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி, சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார், சிங்காரவேலன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
முகாமில் கலந்துக்கொண்ட ஆட்சியர் பேசுகையில் இங்கு வந்துள்ள அனைவருக்கும் இலவசமாக பரிசோதனைகள் செய்யப்படும். பெண்கள் நலன் காக்கவும், அவர்களின் ஆரோக்கியம் காக்கவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகளின் திருமணங்களை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
குழந்தை திருமணம் நடத்தும் பெற்றோர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள், விருந்து உண்பவர்கள் என அனைவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி இல்லாதவர்கள் கலைஞர் உரிமை தொகை வாங்கினால் அவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment