இந்த நிகழ்ச்சியில, திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.வடிவேல், ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் லலிதா மோகன்குமார், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தில் புதிய கட்டிடங்கள் கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட அங்கன் வாடி மைய கட்டிடத்தை மும், அதே போன்று கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வர காரணம் கைகளை நன்றாக கழுவவேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு கட்டிடஙக்ளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கலைஞர் உரிமை தொகை பெற விடுப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் தகுதி இல்லாத நபர்கள் யாராவது இருந்தால் தகவல் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு கல்வி முக்கியம். பெண் குழந்தை திருமணத்தை தடுக்கப்படவேண்டும். அப்படி குழந்தை திருமணம் நடந்தால் திருமணத்தை தடுக்க போன் பன்னுங்கள் என்றார்.
இளம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்றார்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment