திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 25 November 2023

திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், ப.முத்தம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த சிறப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துவக்கி வைத்தார். 

இந்த முகாமில்  கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், கந்திலி துணை சேர்மன் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். 


இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு இலவச பேருந்து, மருத்துவ முகாம்கள், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவுகள் பொறுத்தவரை சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். பல்வேறு நோய்கள் வர காரணம் தற்போது உள்ள உணவுகள் தான். கூட்டு குடும்பம் இல்லாததால் தான் தற்போது பல்வேறு  குடும்பங்களில் பிரச்சனைகள் வருகிறது. 


எல்லோரும் இலவச மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆட்சியர் பேசுகையில் நோய்கள் வருமுன் காப்பது முக்கியம். பொதுமக்கள் நலன் பெறவே முதல்வர் துவங்கி வைத்தார். இங்கு வந்துள்ள அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படும். பெண்கள் நலன் காக்கவும், அவர்களின் ஆரோக்கியம் காக்கவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. 


மாவு சத்துக்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறோம்.  ஓட்டல்களில் உள்ள எண்ணெய் தரமற்றவை. அதனால் சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளவும், உறவினர்களுக்கு ஸ்வீட் வாங்கி செல்கின்றனர். அதை தவிர்த்திடுங்கள். சிறுதானியங்களால் ஆன பொருட்களை வாங்கி கொடுங்கள்.  கைகளை சுத்தமாக கழுவுங்கள்


காய்கறிகளை நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.   சிறுதானியங்கள் அதிகளவு எடுத்துக்கொள்ளவும். பழங்களை அதிகளவு எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழ சிறுதானியங்களை அதிகளவு எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.


- மாவட்ட செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/